தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 596 பேர் பாதிப்பு

COVID-19 Chennai
By Thahir Jun 18, 2022 05:58 PM GMT
Report

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 600-ஐ நெருங்கியுள்ளது. புதிதாக 596 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதம் 1ந்தேதி நிலவரப்படி 50க்கு கீழ் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

இன்று புதிதாக 15,881 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 596 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 596 பேர் பாதிப்பு | Corona Infection On The Rise In Tamil Nadu

தினசரி கொரோனா பாதிப்பு விகிதம் 3.75ஆக அதிகரித்துள்ளது.தமிழ்நாட்டில் அதிகபட்சமாக இன்று சென்னையில் 295 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக செங்கல்ப்பட்டு மாவட்டத்தில் 122 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 31 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3073ஆக அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34,60,182ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் 38,026 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.