நீங்கள் கொரோனா பாதித்து குணமானவரா? இதயம் மட்டுமல்ல மூளைக்கும் அபாயம்!
கொரோனா பாதிப்பு குறித்த புதிய ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களில் கணிசமானோர் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், ’நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினி’ல் ஆய்வு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கொரோனாவுக்கு காரணமான வைரஸ் பல வழிகளில் மூளை ஆரோக்கியத்தை ஆழமாக பாதிக்கிறது . இது நடைமுறையில் சாதாரண நினைவாற்றல் பிரச்சினை முதல் நீடித்த அறிவாற்றல் குறைபாடுகள் வரை, கொரோனா பாதிப்பில் மீண்டவரை அச்சுறுத்துகின்றன.
டிமென்ஷியா
உச்ச பாதிப்பாக ’மூளை சுருக்கம்’ வர வாய்ப்பாகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஐசியூ அனுமதி வரை தீவிர பாதிப்பு கண்டவர்களின் மூளை, 20 ஆண்டுகள் வயதானதன் பாதிப்புக்கு ஆளாகக்கூடும்.
60 வயதைக் கடந்தவர்கள் மத்தியில் நினைவாற்றல் இழப்புகளின் தீவிரத்தன்மையான ’டிமென்ஷியா’ பாதிப்பு வரை கொண்டு செல்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்கள் இதயம் மட்டுமன்றி மூளை ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது சிறந்தது.