தமிழகத்தை தீவிரமாக தாக்கும் கொரோனா; ஒரே நாளில் இத்தனை பேருக்கா.. அதிர்ச்சி அறிக்கை!
கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு
சீனாவில் தொடங்கிய கொரோனா பாதிப்பு 2021 வரை ஒட்டுமொத்த உலக நாடுகளையும் உலுக்கியது. பல லட்சம் மக்கள் கொரோனாவால் பலியான நிலையில் பல கோடி பேர் நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர்.
அதனையடுத்து, பழைய நிலை திரும்பிய நிலையில் தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்கு கொரோனா ஓமிக்ரான் வைரஸின் மாறுபாடு கொண்ட ஜேஎன்.1 வைரஸ் தான் காரணமாக கூறப்படுகிறது.
தீவிர பரவல்
அந்த வகையில், கேரளாவில் தினசரி பாதிப்பு 200யை கடந்து உள்ளது. தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 14 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலாக 3 பேர், நீலகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா 2 பேர், தர்மபுரி, கன்னியாகுமரி, திருவள்ளூா் மற்றும்
தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதன்படி, கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளது.