தங்கத்திற்கு டஃப் கொடுக்கும் செம்பு - எங்கெல்லாம் உற்பத்தியாகுது தெரியுமா?
செம்பின் விலை கிட்டத்தட்ட 35 சதவீதம் உயர்ந்துள்ளது.
செம்பின் விலை
தங்கத்திற்கு அடுத்தபடியாக செம்பு மிகவும் விரும்பப்படும் உலோகமாக உள்ளது. இது போர் விமானங்கள், மின்சார மோட்டார்கள், சோலார் பேனல்கள் மற்றும் காற்றாலை உள்ளிட்ட அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

கடந்தாண்டில் 5.3 மில்லியன் மெட்ரிக் டன்களுடன், உலகின் முன்னணி செம்பு உற்பத்தியாளராக சிலி உள்ளது. 3.3 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தியுடன் இரண்டாவது பெரிய செப்பு உற்பத்தியாளராக காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC) உள்ளது.
உயர்வு
2.6 மில்லியன் மெட்ரிக் டன்களை பெரு எட்டியது. அதேபோல், 2024ஆம் ஆண்டில் சீனா 1.8 மில்லியன் மெட்ரிக் டன் செம்பை உற்பத்தி செய்தது. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை முந்தி, இந்தோனேசியா கடந்தாண்டு 1.1 மில்லியன் மெட்ரிக் டன் செப்பு உற்பத்தியுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் செம்பு ஒரு டன்னுக்கு கிட்டத்தட்ட 1,500 டாலர் உயர்ந்துள்ளது. மேலும், செம்பின் விலை, நடப்பாண்டில் இதுவரை கிட்டத்தட்ட 35 சதவீதம் உயர்ந்துள்ளது.
தற்போது ஒரு டன் செம்பின் விலை 10,920 அமெரிக்க டாலர் என்ற நிலையில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.