தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் - இன்றைய விலை நிலவரம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1080 அதிகரித்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (அக். 29) விலை அதிகரித்துள்ளது.
உயர்வு
அந்த வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 அதிகரித்து ரூ.11,210க்கும், சவரனுக்கு ரூ.1,080 அதிகரித்து ரூ.89,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து 166 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கை IBC Tamil
சிவாஜிலிங்கம் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெற்றோர்களை இறுதிவரை பாதுகாத்தவர் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் IBC Tamil