இந்து பெண்களுக்கு கருத்தடை; பகீர் கிளப்பிய இந்து முன்னணி பிரமுகர் - பரபரப்பு சம்பவம்!
இந்து முன்னணி மாநில செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்தடை விவகாரம்
திருநெல்வேலி டவுனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
தொடர்ந்து அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரின் சம்மதம் எதுவும் பெறாமல் கருத்தடை சாதனமான காப்பர் டி வைத்துள்ளதாக இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் குற்றம் சாட்டினார்.
பிரமுகர் கைது
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்த பதிவில், இந்து பெண்களுக்கு அவர்கள் சம்மதம் இன்றி கருத்தடை சாதனம் பொருத்தும் செயல் இந்துக்களின் மக்கள் தொகையை கருவறுக்கும் செயல் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த தகவல் வைரலான நிலையில், பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது.
மேலும், அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற குற்றாலநாதனை கைது செய்தனர்.
இதனையடுத்து இந்த கைதை கண்டித்து நெல்லை வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜேஸ்வரன் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம், தர்ணா நடத்தினர். அதில் 15 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.