நிஜ போலீஸ் ஸ்டேஷனுக்கு கால் செய்து மாட்டிக் கொண்ட போலி போலீஸ் - வெளியான உண்மை!
போலீஸ் வேடமிட்டு பண மோசடி செய்த நபர் நிஜ போலீசுக்கு கால் செய்து மாட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
போலி போலீஸ்
இன்றைய காலக்கட்டத்தில் இணையத்தளம் என்பது பெருவாரியான மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. இதனை தன் வசமாக்கி பல மோசடி கும்பல் மக்களை ஏமாற்றி பண மோசடியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அண்மையில் பிரதமர் மோடி மக்களுக்கு விழிப்புணர்வு மெசேஜ் கொடுத்து இருந்தார்.
மக்கள் யாரும் மோசடி கும்பலிடம் சிக்கிவிட கூடாது. டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பணம் பறிக்கும் மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இந்த நிலையில், போலீ போலீஸ் வேடமிட்டு டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பணம் பறிக்கும் மோசடி ஆசாமி ஒருவர் தெரியாமல் கேரளா,
நிஜ போலீஸ்
திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிக்கு வீடியோ கால் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் செட்டப் செய்து ஒரு நிஜ போலீஸ் போல் அந்த வீடியோ காலில் பேசுகிறார். தான் போன் செய்யப் போவது ஒரு போலீஸ் அதிகாரிக்கு என்று தெரியாமல்,
வழக்கம்போல் வீடியோ அழைப்பில் அவர் பேசுகிறார். அதில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப் போவதாக கூறி உதார் விடுகிறார். இதனிடையே தன்னுடன் பேசுபவர் போலி போலீஸ் என்பதை புரிந்து கொண்ட சைபர் கிரைம் அதிகாரி, அந்த போலி போலீசிடம் நீ பேசிக் கொண்டிருப்பது திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் பிரிவுடன் என்று கூறினார்.
இதை தொடர்ந்து அந்த மோசடி ஆசாமியிடம் உன்னுடைய லொகேஷன், உன்னுடைய அட்ரஸ் எல்லாம் எங்களிடம் மாட்டிக் கொண்டு விட்டது என்று தெரிவித்துள்ளார். மோசடி ஆசாமி பயந்து நடுங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் படு வைரலாகியுள்ளது.