Tuesday, Jul 8, 2025

சிவாங்கியை நடுரோட்டில் வச்சி செய்த கூல் சுரேஷ் - இணையத்தில் வைரல்!

Tamil Media Tamil TV Shows Tamil Singers Cool Suresh
By Vinothini 2 years ago
Report

நடிகர் கூல் சுரேஷ் நடுரோட்டில் சிவாங்கியை மறித்து பேசியது வைரலாகி வருகிறது.

சிவாங்கி

விஜய் டிவியில் பிரபலமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இவரது எதார்த்தமான பேச்சு மற்றும் இவரது செயல்களால் பல ரசிகர்களை கவர்ந்தார். பிறகு இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருந்தார்.

cool-suresh-damaged-sivangi

இவர் தற்பொழுது அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக உள்ளார். இவர் சமீப காலமாக சில படங்களில் நடித்தும் சில படங்களில் பாடல்களை பாடியும் வருகிறார்.

கூல் சுரேஷ் பேச்சு

இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷ், சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை ப்ரமோட் செய்யும் விதமாக சாலையில் டிரிங் அண்ட் டிரைவ் பண்ணக் கூடாது என்றும் ஹெல்மட், சீட் பெல்ட் போடவேண்டும் என்று விளம்பரப்படுத்தி கொண்டிருந்தார்.

cool-suresh-damaged-sivangi

அப்பொழுது தான் சிவாங்கி அந்த வழியாக காரில் வந்துள்ளார், அவரை வழிமறித்த கூல் சுரேஷ் சிவாங்கி சீட் பெல்ட் போடாமல் காரில் செல்லக் கூடாது என்றும் பிரபலங்கள் ஆகிய நாமே ரூல்ஸை மதிக்கவில்லை என்றால் பொதுமக்கள் எப்படி ஃபாலோ பண்ணுவாங்க என்று கூறினார்.

மேலும், டிரிங்க் அண்ட் டிரைவ் பண்ணக் கூடாது என்று அவரிடம் கூறி டேமேஜ் செய்துவிட்டார். தொடர்ந்து, ஹெல்மட் போடாமல் வந்த நபர்களை நிறுத்தி அட்வைஸ் செய்து வந்தார்.