நடிகர் சிம்பு பெயரில் ஆதாயமா - திடீரென கடலில் குதித்த கூல் சுரேஷ்..!

Thahir
in பிரபலங்கள்Report this article
நடிகர் கூல் சுரேஷ் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்த போது திடீரென கடலில் குதித்ததால் ஆங்கர் பதறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலான கூல் சுரேஷ்
சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் தான் செல்லும் இடமெல்லாம் வெந்து தணிந்தது காடு...வணக்கத்த போடு என்று கூறிய டயலாக் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இந்த நிலையில் கூல் சுரேஷ் பத்து தல படத்திற்காக ஹெலிகாப்படரில் வந்து விமர்சனம் செய்ய திட்டமிட்டிருந்ததாராம்.
நடுக்கடலில் குதித்ததால் பரபரப்பு
சினிஉலகம் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது சூட்டிங் நடுக்கடலில் படகில் சென்று கொண்டே சூட் செய்யப்பட்டது. அப்போது தொகுப்பாளர் சூர்யா சிம்புவை வைத்து தன்னுடைய விளம்பரத்திற்காக கூல் சுரேஷ் இப்படி செய்து வருகிறார் என ரசிகர்கள் பேசுகிறார்கள் என்று கேட்க,
பொறுமையாக பதில் அளித்து வந்த அவர் திடீரென கோபமடைந்து மைக்கை கழற்றி தொகுப்பாளர் மீது எறிந்து விட்டு திடீரென நடுக்கடலில் குதித்தார்.
இதனால் பதறிப்போன தொகுப்பாளர் சூர்யா படகை ஓட்டிச் சென்றவர்களை உடனடியாக உதவிக்கு அழைத்து அவரை காப்பாற்றினார்.
பரபரப்பு வீடியோ காட்சி இதோ...