எப்போ கல்யாணம்? காதலியுடனான போட்டோஷூட் மூலம் குட்நீயூஸ் சொன்ன புகழ்!

Only Kollywood Pugazh Marriage Viral Photos
By Sumathi 3 மாதங்கள் முன்

குக் வித் கோமாளி புகழ் தனது திருமணம் குறித்து முதல் முறையாக தகவல் வெளியிட்டுள்ளார்.

புகழ்

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சியாக வலம் வந்தது குக் வித் கோமாளி. இதற்கென்று ரசிகர்கல் பட்டாளம் ஏராளம். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் புகழ்.

எப்போ கல்யாணம்? காதலியுடனான போட்டோஷூட் மூலம் குட்நீயூஸ் சொன்ன புகழ்! | Cook With Comali Pugazh Announces His Marriage

தனது நகைச்சுவை உணர்வால் ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்து விட்டார். இந்த நிகழ்ச்சி இதுவரை 3 சீசன்களை கடந்துள்ளது. இந்த 3 சீசன்களில் இரண்டாவது சீசன்தான் ரசிகர்களின் பேவரிட்டாக அமைந்தது.

குக் வித் கோமாளி

இந்த நிகழ்ச்சியில் புகழ், ஷிவாங்கி, மணிமேகலை என கோமாளிகளே அதிகம் ரசிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியின் நிறைவிலேயே, வெள்ளித்திரை இவருக்கான இடம் அளித்து காத்திருந்தது.

எப்போ கல்யாணம்? காதலியுடனான போட்டோஷூட் மூலம் குட்நீயூஸ் சொன்ன புகழ்! | Cook With Comali Pugazh Announces His Marriage

8 படங்களை கைவசம் வைத்திருந்தார். தற்போது அஜித், சூர்யா, சந்தானம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவருகிறார். அதனைத் தொடர்ந்து Zoo Keeper என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

விரைவில் திருமணம்

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பென்ஸ் ரியா என்பவரை காதலிப்பதாகவும், கூடிய விரைவில் திருமணம் என்றும் தெரிவித்திருந்தார் புகழ். இந்நிலையில் தன்னுடைய காதலியுடன் புதிய போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அதில், ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு Coming Soon எனவும் குறிப்பிட்டுள்ளார். இவரின் திருமணம் உறுதியாகியுள்ளதையடுத்து, அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.