முடிவுக்கு வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.. விஜய் டிவி எடுத்த முக்கிய முடிவு - காரணம் என்ன?
பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இதுவரை 5 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் முதல் நான்கு சீசனில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.
அதேபோல் இந்த நான்கு சீசன்களையும் மீடியா மேசன்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. ஆனால் கடந்த ஆண்டு விஜய் டிவிக்கும் மீடியா மேசன்ஸ் நிறுவனத்துக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுப்பாடு காரணத்தால் நிகழ்ச்சியில் இருந்து விலகினர்.
குக் வித் கோமாளியின் முதல் நான்கு சீசனை போல ஐந்தாவது சீசன் இல்லை என்பது பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் பற்றிய அதிரடி அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
காரணம் என்ன?
அதன்படி அடுத்த சீசன் முதல் அந்நிகழ்ச்சியின் பெயர் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அந்நிகழ்ச்சி மீடியா மேசன்ஸ் நிறுவன பெயர் வைத்ததால் அதே பெயருடன் பயணிக்க விஜய் டிவி தரப்பு விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பெயரை மாற்றி புதுப் பெயருடன் அந்நிகழ்ச்சியை தொடங்க உள்ளதாக தகவக் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இன்னும் சில மாதங்களில் அடுத்த சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பல மாற்றங்களுடன் வேறு ஒரு பரினாமத்துடன் ஒளிப்பரப்படும் என்று தெரிகிறது.