அம்பேத்கருக்கு காவி பூசிய இந்து முன்னணி..பரபரப்பு போஸ்டர் - வலுக்கும் கண்டனங்கள்!
காவி உடை, விபூதி உடனான அம்பேத்கர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை போஸ்டர்
கும்பகோணத்தில் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி இந்து மக்கள் கட்சியினர் ஒட்டிய போஸ்டர் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் அம்பேத்கருக்குக் காவி உடையும், அவரது நெற்றில் விபூதி மற்றும் குங்குமம் வைத்துள்ளது போன்ற படம் இடம் பெற்றுள்ளது.
மேலும் காவி (ய) தலைவனின் புகழைப் போற்றுவோம் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து உடனடியாக கும்பகோணத்தில் ஒட்டப்பட்டிருந்த அனைத்து போஸ்டர்களும் அகற்றப்பட்டன.
மேலும் இந்து மக்கள் கட்சியின் இந்த செயலுக்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த போஸ்டரை ஒட்ட ஏற்பாடு செய்த இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் குருமூர்த்தியை போலிஸார் கைது செய்துள்ளனர்.