பெண்ணுடன் மதபோதகர்; சர்ச்சை வீடியோ - கனல் கண்ணன் மீண்டும் கைது!
அவதூறு வழக்கில் ஸ்டண்ட் இயக்குநர் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனல் கண்ணன்
சினிமா ஸ்டண்ட் இயக்குநரும், இந்து முன்னணியின் கலை, இலக்கிய அணி மாநிலத் தலைவருமான கனல் கண்ணன் கடந்த மாதம் வீடியோ ஒன்றை பதிவிட்டு, "வெளிநாட்டு மத கலாசாரத்தின் உண்மை நிலை இதுதான்?!... மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்! மனம் திரும்புங்கள்!" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதில், கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் இளம்பெண்ணுடன் நடனம் ஆடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ கிறிஸ்தவ பாதிரியார்களின் மாண்பை குலைக்கும் நோக்குடன், கிறிஸ்தவ மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும்,
அவதூறு வழக்கு
மதம் மாறிய இந்துக்களை அவமானப்படுத்தும் நோக்குடனும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக ஐடி விங்கைச் சேர்ந்த ஆஸ்டின் பெனட் என்பவர் நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில், கனல் கண்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரணைக்கு அழைக்கப்பட்டார். தொடர்ந்து, நேரில் ஆஜரான கனல் கண்ணனிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.