ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி ஆள கூடாது; இன்னொருத்தர் போட்ட பிச்சை - நிர்மலா சீதாராமன் சர்ச்சை பேச்சு!
நிர்மலா சீதாராமன் பிரச்சாரம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நிர்மலா சீதாராமன்
சென்னையில் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் 5ஆம் ஆண்டு தொடக்க விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர்,
இந்த அரங்கில் பெரும்பான்மையாக அமர்ந்திருப்பவர்கள் இந்துக்கள்தான். ஆனால் நான் இந்து மதத்தையே அழிப்பேன் என கூறுவதும் அதை டெங்கு மலேரியாவுடன் ஒப்பிடுவதையும் என்ன சொல்வது. இந்த வார்த்தைக்காகவே நாம் சீற்றத்தை காட்ட வேண்டாமா?
நம் கோயிலையே அழிக்கக் கூடிய, நம் கோயிலை சுரண்டி திண்ண கூடிய நம்ம மதத்தையே அழிப்பேனு சொல்ற கட்சிகளுக்கு எல்லாம் ஏன் ஓட்டு போடுறீங்க. ஆன்மிகத்திற்கு எதிரான கட்சி ஆளுமைக்கு வரவே கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம். ஆன்மீகத்தையும் தேசியத்தையும் வளர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள்.
வாட்ஸ்அப்பில் வரும் வரலாற்றை படித்து விட்டு நிர்மலா சீதாராமன் பேசியிருப்பார் - மு.க.ஸ்டாலின் பதிலடி!
சர்ச்சை பேச்சு
நாடு முன்னேற ஒவ்வொருவரும் ஓட்டு கேளுங்கள். எப்போதும் இன்னொருத்தர் போட்ட பிச்சையில் நாம் வாழத் தேவையில்லை. வெள்ள பாதிப்பா இந்தா ஆயிரம் ரூபாய், வீடு இடிந்து போய்விட்டதா, இந்தா 500 ரூபாய், என சில கட்சிகள் மக்களை டீல் செய்கின்றன எனக் கூறியிருந்தார்.
இதற்கிடையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் விதிகளில் ஜாதி, மத ரீதியில் பேசக் கூடாது, யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது என தெரிவித்திருந்தார்.
ஆனால், தேர்தல் ஆணைய விதிகளை மீறும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். இதனால் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் எழுந்துள்ளது.