ஆபாச தகவலுடன் விளம்பர பலகை - கடும் சர்ச்சையை கிளப்பிய தங்கும் விடுதி!
சர்ச்சைக்குரிய விளம்பர பலகை வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளம்பர பலகை
சென்னை, சின்னமலை பகுதியில் என்ஜிஆர் காலனியில் மெட்ரோ நிலையம் அருகே என்ற பெயரில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் முகப்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகை சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அதில், 1000 ரூபாய்க்கு அறை வாடகைக்கு விடப்படும். எந்த பெண்ணை வேண்டுமானாலும் அழைத்து வந்து உல்லாசமாக இருக்கலாம் என ஆங்கிலத்தில் எல்இடி விளம்பர பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்ட ஒருவர்,
சர்ச்சை
அந்த விளம்பர பலகையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு தமிழக முதலமைச்சர் மற்றும் சென்னை காவல்துறையை டேக் செய்திருந்தார். ’சென்னையில் இப்படியொரு சம்பவம் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அது வைரலானதை தொடர்ந்து, காவல்துறை தரப்பில் சம்மந்தப்பட்ட தனியார் தங்கும் விடுதியிடம் விளக்கம் கேட்டு, அதன்படி சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அந்த விளம்பர பலகையை தங்கும் விடுதியின் நிர்வாகமே அகற்றியதாக தெரியவந்துள்ளது.