முதல்ல ஆசீர்வாதம் இப்போ ஆசிரமம் : அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கும் ஆரம்பிக்கும் அன்னபூரணி அரசு
ரமணா ஆசிரமம்,சேஷாத்திரி ஆசிரமம் என்று திருவண்ணாமலை பகுதி முழுவதும் ஏராளமான ஆசிரமங்கள் உள்ள நிலையில் திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் புதிதாக ஆசிரமம் கட்ட பூமி பூஜை போட்டிருக்கிறார் அன்னபூரணி அரசு அம்மா.
கடந்த 2014ஆம் ஆண்டில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்னபூரணி, அரசு என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததால் தனது கணவரையும், 14 வயது பெண் குழந்தையையும் பிரிந்து அரசுடனே செல்வது என்று உறுதியாக இருந்து நிகழ்ச்சியின் முடிவில் அவருடனேயே சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அரசுடன் ஈரோடு ஈரோட்டில் வசித்து வந்துள்ளார் அன்னபூரணி. ஆனால் சில காலத்தில் அரசு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. an அதன்பின்னர் காதலன் அரசு உருவ சிலையை வடித்து சிலகாலம் அவரை வழிபட்டு வந்துள்ளார் அன்னபூரணி.
அதை அடுத்து அம்மன் தொண்டு நிறுவனம் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். பின்னர் அன்னபூரணி அரசு அம்மாவாக தன்னை மாற்றிக்கொண்டு ஆதி பராசக்தியின் அவதாரம் என சொல்லிக்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார். ஆன்மீக உரை நிகழ்த்தி வருகிறார் .
இந்த நிலையில்தான் அவர் திருவண்ணாமலை அடுத்த பெண்ணாத்தூர் அருகே இருக்கும் செண்பகத்தோப்பு பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ஆசிரமம் அமைக்க ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதற்காக பூமி பூஜையும் போட்டிருக்கிறார். அதுவரைக்கும் தற்காலிகமாக கூரையில் ஆசிரமம் அமைத்துள்ளார்.
அங்கு பல்வேறு பகுதிகளிலும் வந்துள்ள ஆண்களும் பெண்களும் அன்னபூரணி அரசு அம்மாவின் காலில் விழுந்து வணங்கிச் செல்கிறார்கள். அவருக்கு சூடம் ஏற்றி தீபாராதனை காட்டுகிறார்கள். அவர்களில் கால் அன்னபூரணி அரசு அம்மாவின் காலில் மலர்கள் தூவி வழங்குகிறார் செல்கிறார்கள்.