8 மாத கருவை சுமக்கும் 16 வயது சிறுமி - அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கருக்கலைப்பு தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
கருக்கலைப்பு
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 15வயது சிறுமியின் 32 வார கருவை கலைப்பதற்கு அனுமதி கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சேகர் மற்றும் மஞ்சீவ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது, கருவை சுமந்து குழந்தையை பெற்று எடுப்பது அல்லது கருவை கலைப்பது சிறுமியின் முடிவை சார்ந்தது. கருவை சுமந்து குழந்தையை சிறுமி பெற்று எடுத்த, பின் அந்த குழந்தையை தத்து கொடுக்க விரும்பினால், சிறுமி மற்றும் குழந்தையின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் என கூறினார்.
ஆலோசனை
மேலும், 32 வாரங்களில் கர்ப்பத்தை கலைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சிறுமிக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது. இறுதியில், சிறுமியும் அவளுடைய பெற்றோரும் கர்ப்பத்தைத் தொடரவும், குழந்தையைத் தத்துக் கொடுக்கவும் முடிவு செய்தனர்.
குழந்தை பிறப்பதற்கான அனைத்து செலவையும் அரசே ஏற்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதலாக, குழந்தையை தத்துக்கொடுப்பதற்கு வசதியாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் (CARA) இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் பின் வழக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.