ஹரியானாவில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி; மூட்டை..மூட்டையாக பணமா? பறக்கும் படை பறிமுதல்!

BJP Chennai Election Haryana
By Swetha Mar 26, 2024 05:47 AM GMT
Report

சென்னைக்கு வந்த கன்டெய்னர் லாரியில் உள்ள 500 மூட்டையை பறக்கும் படை சோதனை செய்தனர்.

கன்டெய்னர் லாரி

மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இப்படியாக ஒரு புறம் இருக்க, மறுப்புறம் ர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹரியானாவில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி; மூட்டை..மூட்டையாக பணமா? பறக்கும் படை பறிமுதல்! | Container From Haryana Confiscation Of 500 Bundles

பல பகுதிகளில் வாகனங்களை சோதனையிடும்போது, கிலோ கணக்கில் தங்கம், லட்சக் கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஹரியாணா மாநிலத்தில் இருந்து சென்னை மாதவரத்துக்கு கன்டெய்னர் லாரி ஒன்று வருவதாகவும், அதில் கட்டுக் கட்டாக கோடிக் கணக்கில் பணம் இருப்பதாகவும் பறக்கும் படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

யார் மனுவை முதலில் பெறுவது? ஒரே சமயத்தில் வந்த சேகர்பாபு-ஜெயக்குமார்; இரு தரப்பும் வாக்கு வாதம்!

யார் மனுவை முதலில் பெறுவது? ஒரே சமயத்தில் வந்த சேகர்பாபு-ஜெயக்குமார்; இரு தரப்பும் வாக்கு வாதம்!

பறக்கும் படை பறிமுதல்

அதன்படி, சென்னை பறக்கும் படை கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அப்போது, வில்லிவாக்கம் அருகே அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த கன்டெய்னரில் 500-க்கும் மேற்பட்ட மூட்டைகள் குவிந்து கிடந்தன.

ஹரியானாவில் இருந்து வந்த கன்டெய்னர் லாரி; மூட்டை..மூட்டையாக பணமா? பறக்கும் படை பறிமுதல்! | Container From Haryana Confiscation Of 500 Bundles

அவற்றில் பணம் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரித்துப் பார்த்தபோது, எல்லா மூட்டைகளிலும் பாஜக சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகள், தொப்பிகள் இருப்பது தெரியவந்தது. இவை அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்துக்காக சென்னையில் உள்ள பாஜகவினருக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளனர்.

அதனை பறிமுதல் செய்த தனிப்படையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட பிறகு, சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.