ஒரே உடல் தான்..2 தலை - இரட்டை சகோதரிகளில் ஒருவருக்கு காதலன் - சுவாரஸ்ய நிகழ்வு!
ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளில் ஒருவருக்கு காதலன் உள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டிப்பிறந்த சகோதரிகள்
மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் லூபிடா மற்றும் கார்மென்(22) இரட்டைச் சகோதரிகள். தற்போது, அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இந்த சகோதரிகள் பிறந்ததும், அவர்கள் 3 நாட்கள் மட்டுமே உயிரோடு இருப்பார்கள் என மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் தற்போது தங்கள் வாழ்நாளில் 22 வருடங்களை கழித்துள்ளனர். இவர்களுக்கு, இடுப்புக்கு கீழே மொத்த உடலும் ஒட்டியுள்ளது. மேலும், ஒரே ஒரு இனப்பெருக்க உறுப்பு மட்டுமே உள்ளது. அதாவது, ஒருவர் உறவு வைத்தாலும் இருவரும் ஒன்றாகவே கர்ப்பமாவார்கள்.
காதல் வாழ்க்கை
உடலின் இரத்த ஓட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், இரு சகோதரிகளில் கார்மனுக்கு ஒரு ஆண் நண்பர் இருக்கிறார். டேட்டிங் ஆப் மூலம் அவர் டேனியலை சந்தித்துள்ளார். டேட்டிங் செய்வதற்கு முன், இருவரும் இதைப் பற்றி மிகவும் ஆழமாக உரையாடியதாக கூறுகிறார்கள்.

இருவரும் உடல் ரீதியான உறவில் கவனம் செலுத்தாமல், ஆத்மார்த்தமான அன்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள்.
சிங்கிளாக இருக்கும் லூபிடா விரைவாக தூங்கிவிடுவார். அதன் பிறகு கார்மனும் டேனியலும் நிறைய பேசுகிறார்களாம். டேட்டிங் என்று வரும்போது, அந்த நாளை செலெக்ட் செய்யும் வாய்ப்பை கார்மென் லூபிடாவிடம் கொடுத்து விடுவதால கூறியுள்ளனர்.
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan