மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து விலகல்!
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து விலகினார்.
குலாம் நபி ஆசாத்
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரான குலாம் நபி ஆசாத் அண்மைக் காலமாக அதிருப்தியில் இருந்தார். காங்கிரஸ் மேலிடத்தின் மீதான அதிருப்தி தலைவர்கள் அணி 23 பேரில், குலாம் நபி ஆசாதும் ஒருவர்.

இந்நிலையில், காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் கட்சியிலிருந்தே விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸிலிருந்து விலகல்
இது தொடர்பான தனது ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கும் அறிவித்திருக்கிறார். மேலும் தனது ராஜினாமா குறித்த காரணத்தை அவர் இன்னும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே மூத்த தலைவர்களான கபில் சிபில் உள்ளிட்ட பலர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில் இவரது விலகலும் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.