காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு : பதவி கொடுத்த சில மணி நேரத்தில் ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்

Indian National Congress
By Irumporai Aug 17, 2022 03:12 AM GMT
Report

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத் பிரச்சார குழு தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

குலாம் நபி ஆசாத் 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

சில மணிநேரத்தில் ராஜினாமா

இந்த நிலையில் நேற்று குலாம் நபி ஆசாத் ஜம்மு-காஷ்மீரின் பிரச்சாரக் குழுவின் புதிய தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ஆசாத் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு : பதவி கொடுத்த  சில மணி நேரத்தில் ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத் | Ghulam Nabi Azad Resigned His Appointment

இது அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது தலைவர் பதவி மட்டுமல்ல, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.