உயர்சாதி மனப்பான்மைதான்.. 10% இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சர்ச்சை கருத்து
10% இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
10% இட ஒதுக்கீடு
பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.

அதன் அடிப்படையில், நீதிபதி பேலா திரிவேதி ஆதரவு 10% இடஒதுக்கீடு சட்டத்திருத்தம் 50%இடஒதுக்கீடு என்ற வரையறையை மீறவில்லை. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10%இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்தார்.
உதித் ராஜ் கருத்து
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் தனது ட்விட்டர் பதிவில், நான் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரானவன் அல்ல. ஆனால் இந்திரா சஹானியின் தீர்ப்புக்கு பிறகு அது என்னவாக இருந்தது.
இன்று அதற்கு மாறாக யு டர்ன் எடுத்தது என்ற உச்ச நீதிமன்றத்தின் உயர்சாதி மனப்பான்மை கண்டு வேதனை அடைகிறேன். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.-க்கு இடஒதுக்கீடு விஷயங்கள் வரும்போதெல்லாம் உச்ச நீதிமன்றம் 50 சதவீத வரம்பை நினைவூட்டுகிறது என பதிவு செய்து இருந்தார்.
பாஜக கண்டனம்
இதற்கு பாஜகவின் செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, காங்கிரஸ் நல்லது எதுவும் இல்லாத கட்சி. அவரது வார்த்தைகள் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இது போன்ற கருத்துக்கள் கண்டிக்கப்பட வேண்டும்.

அவரது வார்த்தைகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்துள்ளார்.