கேப்டனா இருக்கவே தகுதியில்லை; ரோஹித் உடம்பை குறைக்கணும் - காங். நிர்வாகி சர்ச்சை கருத்து
ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் நிர்வாகி இருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இதில், 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடர்ந்து இந்திய அணி அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்நிலையில், ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் நிர்வாகி ஷாமா முகமது கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நிர்வாகி சர்ச்சை கருத்து
இவர் தனது எக்ஸ் பக்கத்தில், ஒரு விளையாட்டு வீரராக ரோஹித் சர்மா அதிக உடல் எடையுடன் இருக்கிறார். அவர் இன்னும் உடல் எடையை குறைக்க வேண்டும். அதேபோல் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகவும் தகுதியில்லாத கேப்டன் ரோஹித் சர்மா தான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உடனே ரோஹித் சர்மா ரசிகர்கள் மற்றும் பாஜகவினர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். எனவே, ஷாமா முகமது தனது பதிவை நீக்கினார். இதற்கிடையில், ரோஹித் சர்மாவின் ஃபிட்னஸ் குறித்து ரசிகர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.