இந்திய அணியில் அரையிறுதிக்கு முன் இரண்டு வீரர்கள் வெளியேற்றம்? முக்கிய தகவல்!
இந்திய அணி ஓப்பனிங்கில் பெரிய மாற்றத்தை செய்யவுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் குரூப் சுற்று இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் குரூப் ஏ பிரிவில் யார் முதலிடம் என்பது தீர்மானிக்கப்படும்.
அதன்பின், நாக் அவுட் சுற்றுகள் தொடங்கவுள்ளன. இந்நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் நியூசிலாந்து உடனான அடுத்த போட்டி மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
ஓப்பனிங்கில் மாற்றம்?
இதில், காயம் அடைந்துள்ள இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் மீதமுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அடுத்து வெளியாகும் ஹெல்த் அப்டேட்டை பொறுத்து ரோஹித் மற்றும் கில் பங்கேற்பது குறித்து தெரியவரும் என்று தெரிகிறது.
தொடர்ந்து, ரோஹித் - கில் விளையாட முடியாவிட்டால், விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.