பாகிஸ்தான் தீவிரவாதிகள் பிளான் இதுதான் - சாம்பியன்ஸ் டிராபிக்கு இன்டெல் எச்சரிக்கை
தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக பாகிஸ்தான் உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில், வெளிநாட்டு வீரர்கள் மற்றும் தொடரை காண வரும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாகிஸ்தான் இன்டெலிஜென்ஸ் பீரோ (Intel) என்ற அமைப்பு பாகிஸ்தானில் உள்ள பல்வேறு அரசு பாதுகாப்பு துறைகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில், அதில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறும் இடங்களில் வெளிநாட்டினரை கடத்துவதற்கு சில தீவிரவாத குழுக்கள் சதி திட்டம் தீட்டி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல்
இந்த தகவல் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2009ல் இலங்கை கிரிக்கெட் அணி மீது லாகூரில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது.
இதனையடுத்து சுமார் 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் தொடரான சாம்பியன்ஸ் டிராபி நடந்து வருகிறது. தற்போது இந்த எச்சரிக்கையால் இந்த தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் அணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே, 12,000 பாதுகாவலர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடர்பான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.