கடவுளால் அனுப்பப்பட்டவர் தியானம் செய்வது போல நடிக்கக்கூடாது - காங்கிரஸ் கிண்டல்

Indian National Congress BJP Narendra Modi Kanyakumari
By Karthick May 31, 2024 06:23 AM GMT
Report

3 நாட்கள் தியானமாக பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தியானம்

கன்னியகுமரியில் அமைத்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், நேற்று இரவு தியானத்தில் அமைந்த பிரதமர் மோடி, நாளை வரை தீவிரமாக தியானத்தில் ஈடுபடுகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் அண்மையில் வெளியிடப்பட்டது.

Modi meditation

காவி உடையில், அமைதியாக அமர்ந்துள்ளார் மோடி.  இந்நிலையில், அவரின் தியானத்தை குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூபேஷ் பாகேல் கிண்டல் செய்துள்ளார்.

காங்கிரஸ் கிண்டல்

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகேலின் இது குறித்து பேசியது வருமாறு, கங்கனா ரனாவத் மற்றும் சம்பித் பத்ரா ஆகியோர் கடவுளை தங்கள் (பிரதமர் மோடியின்) பக்தர் என்று அழைத்தனர், பின்னர் அவர்களை உயிரினங்கள் மற்றும் உயிரினங்கள் என்று கூட அழைக்க முடியாது.

Congress slams modi meditation

கடவுளால் அனுப்பப்பட்ட நபர் தியானம் செய்வது போல் நடிக்கக்கூடாது. செய்ய வேண்டிய அவசியமில்லை. இதில் நாடகம் என்பது தன்னை கடவுளால் அனுப்பியதாகக் கருதுகிறார்.

காவி உடையில் - விவேகானந்தர் பாறையின் மீது தியானத்தில் பிரதமர்!!

காவி உடையில் - விவேகானந்தர் பாறையின் மீது தியானத்தில் பிரதமர்!!

தொடர்ந்து 45 மணி நேரம் தியானத்தில் இருக்கும் பிரதமர், இந்த காலகட்டத்தில் உணவில் தேங்காய் தண்ணீர் மற்றும் திராட்சை சாறு போன்றவற்றை மட்டுமே சேர்த்துக்கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது.

Modi meditation

முன்னதாக செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், தான் பயோலொஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை, கடவுளால் அனுப்பப்பட்டிருக்கலாம் என பிரதமர் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.