மக்கள் பாஜகவை தோற்கடிப்பார்கள்; நாடு முழுவதும் மாற்றத்தின் புயல் வீசுகிறது - ராகுல் காந்தி நம்பிக்கை!
இந்தியாவின் முன்னேற்றத்திற்காக அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்குமாறு காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு! அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் காக்க மக்கள் எழுந்து நின்று பா.ஜ.க.வை தோற்கடிப்பார்கள் என்பது முதல் நான்கு கட்டங்களில் தெளிவாகிவிட்டது.
வெறுப்பு அரசியலால் சலித்துப்போன இந்த நாடு இப்போது தனது பிரச்சினைகளுக்காக வாக்களித்து வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு MSP மற்றும் கடனில் இருந்து விடுதலை,
மாற்றத்தின் புயல்
பெண்கள் பொருளாதார சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு மற்றும் நியாயமான கூலிக்கு தொழிலாளர்கள் என அனைத்திற்கும் இந்த தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றிணைந்து போராடுகிறார்கள். மாற்றத்தின் புயல் நாடு முழுவதும் வீசுகிறது.
அமேதி மற்றும் ரேபரேலி உட்பட முழு நாட்டிற்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் குடும்பங்களின் செழிப்புக்காகவும், உங்கள் சொந்த உரிமைகளுக்காகவும், இந்தியாவின் முன்னேற்றத்திற்காகவும் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.