காணாமல்போன காங்கிரஸ் தலைவர்; சடலமாக மீட்பு - சிக்கிய மரண வாக்குமூலம்!

Indian National Congress Tirunelveli Mysterious Death
By Swetha May 04, 2024 07:32 AM GMT
Report

காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்-கை காணவில்லை என அவரது மகன் புகார் அளித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் 

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஜெயக்குமார் தனசிங் இருக்கிறார். முன்னதாக இவருக்கு அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது வீடு மற்றும் அலுவலகத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாகவும் அவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.

காணாமல்போன காங்கிரஸ் தலைவர்; சடலமாக மீட்பு - சிக்கிய மரண வாக்குமூலம்! | Congress President Missing

கடந்த 2 நாட்களாக அவரை காணவில்லை என்று அவரது மகன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், ஆழ்ந்த இறை நம்பிக்கையை கொண்ட அவர் ஜெபம் செய்வதற்காக எங்கேயாவது தனிமையில் சென்றிருப்பார் என்று கருத்தி காத்திருந்தோம் ஆனால், இதுவரை அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்பேரில், நெல்லை போலீசார் அவர் எங்கே இருக்கிறார்? என்ன ஆனார்? மற்றும் கடைசியாக அவர் சென்றது எங்கே? அவரது தொலைபேசி உரையாடல்கள் ஆகிவை குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து, காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளிட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

பாத யாத்திரையில் திடீர் மரடைப்பால் உயிரிழந்த சந்தோக் சிங் சவுத்ரி உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி...!

பாத யாத்திரையில் திடீர் மரடைப்பால் உயிரிழந்த சந்தோக் சிங் சவுத்ரி உடலுக்கு ராகுல் காந்தி அஞ்சலி...!

மரண வாக்குமூலம்

இந்த நிலையில், அவர் மரண வாக்குமூலம் என்ற தலைப்பில் கடிதம் ஒன்று எழுதி காவல்துறையினருக்கு அனுப்பியுள்ளார். அதில், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சொத்துப் பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக தன்னுடன் சிலர் மோதல் போக்கில் இருந்து வருகின்றனர் என எழுதியுள்ளார்.

காணாமல்போன காங்கிரஸ் தலைவர்; சடலமாக மீட்பு - சிக்கிய மரண வாக்குமூலம்! | Congress President Missing

மேலும், அந்த கடிதத்தில் நெல்லையின் தற்போதைய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் ஓருவர் என சிலரின் பெயர்களையும் குறிப்பிட்டு பல்வேறு விஷயங்களை அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது முழுக்க முழுக்க உட்கட்சி மோதலாக இருக்கலாம் என்று போலீசார்  சந்தேகப்பட்ட நிலையில், தற்போது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.அவரது இறப்புக்கு என்ன காரணம்? யார் காரணம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.