காங்கிரஸின் ஒரே மக்களவை உறுப்பினர் காலமானார் - தலைவர்கள் இரங்கல்!
காங்கிரஸ் கட்சி சார்பில் ஆட்சியில் இருந்த ஒரே எம்.பி ஆக இருந்தவர் உடல்நல குறைவால் காலமானார்.
எம்.பி காலமானார்
மகாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு தலைவர் சுரேஷ் பாலு தனோர்கர்.
இவருக்கு 47 வயது ஆகிய நிலையில் இவர் சிறுநீரக கற்களை நீக்கும் சிகிச்சைக்காக கடந்த வாரம் நாக்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுடெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், அப்பொழுது சிகிச்சை பலனின்றி இன்று காலையில் உயிரிழந்தார்.
இவரது தந்தை கடந்த சனிக்கிழமை உயிரிழந்த நிலையில், தற்போது இவரும் உயிரிழந்தது அவரது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரங்கல்
இந்நிலையில், அவரது உடல் இன்று அவரது சொந்த ஊரான வரோராவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இவரது உடல் நாளை காலை இறுதி சடங்கு செய்ய இருக்கும் நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இன்று இயற்கை எய்திய மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் நாராயணன் தானோர்கர் அவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன்.
அன்னாரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்துள்ளார்.