ரத்தம் சொட்ட தாக்கிக் கொண்ட நிர்வாகிகள் - ரணகளமான காங்கிரஸ் அலுவலகம்!
சத்யமூர்த்தி பவனில் கட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சத்தியமூர்த்தி பவன்
சென்னையில், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன், அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியை, எதிர்கோஷ்டியினர் முற்றுகை இட்டனர். தொடர்ந்து,
சரமாரி தாக்குதல்
நெல்லை ஜெயக்குமாருக்கு ஆதரவாகவும் சிலர் குரல் கொடுத்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் சத்தியமூர்த்தி பவன் கலவரமானது. பலர் மூக்குகள் உடைந்து ரத்தம் சிந்திய நிலையில் அங்கும் இங்குமாக ஓடினர்.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அடிதடி. 3 பேருக்கு காயம்.@News18TamilNadu pic.twitter.com/vrZLfbAqlr
— Tamilarasi Dhandapani (@i_tamilarasi) November 15, 2022
அதனையடுத்து தகவல் அறிந்து வந்த போலீஸார் மோதலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதில் கூட்டத்தை விலக்க முயன்ற போது தொண்டர்கள் இருவரின் கன்னத்தில் அழகிரி அறைந்துவிட்டார். அதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.