ஸ்டைலா, கெத்தா லடாக் பைக் ட்ரிப் சென்ற ராகுல் காந்தி - இணையத்தை கலக்கும் ஃபோட்டோஸ்
லடாக்கில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பைக் ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக லே மற்றும் லடாக் பகுதிக்கு சென்றுள்ளார். லேவில் இருந்து கிழக்கு லடாக்கில் உள்ள பேங்காங் சோ ஏரிக்கு ராகுல் காந்தி பைக் ரைடு சென்றார்.
அதன் புகைப்படங்களை ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், " என் தந்தை கூறியதுபோல், பேங்காங் ஏரிக்கு செல்லும் வழியில் உலகின் மிக அழகமான இடங்களில் இதுவும் ஒன்று" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பைக் ரைடு
இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து, னது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்தநாளான ஆகஸ்டு 20ம் தேதி (நாளை) பேங்காங் ஏரியில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
मोहब्बत का सफ़रनामा ? pic.twitter.com/3RhepQQUch
— Congress (@INCIndia) August 19, 2023
முன்னதாக, லெக் பகுதியில் நேற்று 500 இளைஞர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அரங்கம் முழுவதும் இளைஞர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பின் கால்பந்து போட்டியிலும் விளையாடினார்.