படுத்த படுக்கையில் இருந்த ஈவிகேஸ் இளங்கோவன் - குணமடைந்ததாக மருத்துவமனை தகவல்
ஈவிகேஸ் இளங்கோவன் கொரேனா தொற்றிலிருந்து குணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈவிகேஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில், எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.
அதனையடுத்து, சமீபத்தில் நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தொற்றிலிருந்து குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றாக உள்ளார்
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது உண்மைதான். அவருக்கு லேசான மூச்சுத்திணறல் மட்டுமே உள்ளது.
மற்றபடி செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு எந்த சிகிச்சையும் வழங்கப்படவில்லை. இன்று காலையில் கூட பேப்பர் படித்தார் என அவரது உதவியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.