எம்.எல்.ஏ ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கொரேனா தொற்று உறுதி - தீவிர சிகிச்சை
ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈவிகேஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில், எம்.எல்.ஏவாக பதவியேற்றார். அதனையடுத்து, சமீபத்தில் நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் லேசான தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.