மோடியின் 100 நாள் ஆட்சியில் 38 ரயில் விபத்து - பட்டியலிட்டு குற்றஞ்சாட்டும் காங்கிரஸ்

Indian National Congress BJP Narendra Modi India
By Karthikraja Sep 16, 2024 03:30 PM GMT
Report

மோடியின் 100 நாள் ஆட்சியில் நடந்த பல்வேறு சம்பவங்களை பட்டியலிட்டுள்ளது காங்கிரஸ்.

மோடியின் 100 நாள் ஆட்சி

நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். 

narendra modi

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. 

[

ரயில் விபத்து

இதனை முன்வைத்து கடந்த 100 நாளில் நாட்டில் நடந்த பல்வேறு சம்பவங்களைக் குறிப்பிட்டு பாஜக அரசை விமர்சனம் செய்து காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர்களை வெளியிட்டுள்ளது. 

[

இதில் "கடந்த 100 நாட்களில் 38 ரயில் விபத்துகள் நடந்துள்ளதாகவும் அதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 104 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது.

மேலும் காஷ்மீரில் மட்டும் கடந்த 100 நாட்களில் 26 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்ததாகவும், இதில் 21 ராணுவ வீரர்கள் மற்றும் 15 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மோடி டோடாவில் பேசிய அன்று கூட 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

வினாத்தாள் கசிவு

100 நாள் ஆட்சியில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் பெரிய முறைகேடு நடந்துள்ளது. உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தேர்வு தேர்வின் வினாத்தாள் கசிந்து தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் படிப்புக்கான என்சிஇடி தேர்வு வினாத்தாள் கசிந்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

பல நூறு கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றம், ராமர் கோவில் ஆகியவை மழைக்கு ஒழுகிறது. சத்திரபதி சிவாஜி சிலை, அடல் சேது பாலம் ஆகியவை சேதம் அடைந்துள்ளது.

சுங்க சாவடி கட்டணம் 15% உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த 2 வாரங்களில் நடைபெற்ற தாக்குதலில் 12 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளது.