காங்கிரஸ் தலைவரின் கால்களை கழுவிய தொண்டர்; வலுக்கும் கண்டனம் - வைரலாகும் வீடியோ!
காங்கிரஸ் மாநிலத் தலைவரின் கால்களை தொண்டர் ஒருவர் கழுவும் வீடியோ வைரலாகியுள்ளது.
காங்கிரஸ் தலைவர்
மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவராக நானா படோலே இருந்து வருகிறார். அண்மையில் இவரது பிறந்த நாள் விழா கட்சியின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்க அகோலா மாவட்டத்தில் உள்ள வட்கானுக்கு படோலே சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியின் போது, மழை பெய்திருந்தது.
இதனால் மைதானம் முழுவதும் சேறும், சகதியுமாக இருந்துள்ளது. அவர் மற்றவர்களுடன் சேற்று நிலத்தின் வழியே பல்லக்கிற்குச் சென்றார். இதனால் அவரது கால்களில் சேறு அப்பியிருந்தது. அப்போது விஜய் குரவ் என்ற கட்சி தொண்டர், படோலேவின் கால்களில் இருந்த சேற்றை தனது கைகளால் தண்ணீர் ஊற்றி கழுவினார்.
கழுவிய தொண்டர்
அந்த செயலை படோலே தடுக்காததுடன், சேற்றைக் கழுவவும் முற்படவில்லை. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நானா படோலே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், "காங்கிரஸுக்கு நிலப்பிரபுத்துவ மனநிலை உள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோலே அகோலாவில் உள்ள ஒரு கட்சிக்காரரால் அவரது கால் மற்றும் கால்களைக் கழுவுகிறார்.
அவர்கள் தங்களை அரசர்கள் , ராணிகள் போலவும் நடத்துகிறார்கள். அவர்கள் தவறுதலாக ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள்? எனவே, காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார்.
Maharashtra: A party worker was seen washing Congress leader Nana Patole's feet as he returned from Vaidehi and headed back to Nagpur
— IANS (@ians_india) June 18, 2024
(17/06) pic.twitter.com/cJ9p4iuCDO