காங்கிரஸ் மூத்த தலைவர் மாரடைப்பால் மரணம் - தலைவர்கள் இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் தருமபுரி ஸ்ரீனிவாஸ் காலமானார்.
தருமபுரி ஸ்ரீனிவாஸ்
ஆந்திராவின் சக்தி வாய்ந்த தலைவராக திகழ்ந்தவர் தருமபுரி ஸ்ரீனிவாஸ். சோனியா காந்தி உள்பட உயர் காங்கிரஸ் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், மூன்று முறை எம்எல்ஏவாகவும், 2009-ம் ஆண்டு ராஜசேகர் ரெட்டி அரசில் உயர் கல்வி மற்றும் இடைநிலைக்கல்வி அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
மறைவு
மேலும், 2016 முதல் 2022 ம் ஆண்டு வரை ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்தார். மற்றும் 2009-ம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.
இந்நிலையில், இவர் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். தற்போது தெலங்கானாவில் மாரடைப்பால் காலமானார். அவரின் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் நிஜாமாபாத் எம்.பி.யாக உள்ளார். மூத்த மகன் சஞ்சய், நிஜாமாபாத் மேயராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.