மேடையில் மு.க.ஸ்டாலினை அவமதித்த காங்கிரஸார்? அதிருப்தியால் வெளியேறிய பின்னணி!
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்கும் நோக்கில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்திருந்தார்.
மு.க.ஸ்டாலின்
இதில் 19 கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்க சென்றிருந்தார். தொடர்ந்து, மேடைக்கு அழைத்துவரப்பட்ட ஸ்டாலின் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் அருகில் பிரதான இடத்தில் அமர வைக்கப்பட்டார்.

ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவிடம் நிதிஷ் குமார், டி.ராஜா ஆகியோர் நெருக்கமாக நீண்ட நேரம் பேசிய போதும், ஸ்டாலின் அவர்களுடன் பேசாமல் அமைதியாக இருந்தார்.
அதிருப்தி
டி.ஆர்.பாலுவுடன் மட்டும் பேசிக் கொண்டிருந்தார். மேடையில் இரு புறங்களில் இருந்த மைக், டேபிள், நாற்காலி போன்றவற்றால் இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ராகுல், பிரியங்காவுக்கு மத்தியில் நிறுத்திவைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் கூட்ட நெருக்கடியில் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
இந்த குளறுபடிகளால் அதிருப்தி அடைந்த மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா முடிந்து காங்கிரஸ் தலைவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே அங்கிருந்து வெளியேறினார்.
அதன்பின், ஷாங்கிரி லா நட்சத்திர விடுதியில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியுடன் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.