கர்நாடகாவில் மதமாற்றம் தடை சட்டம் வாபஸ், பாட புத்தகத்தில் மாற்றம் - சித்தராமையா அதிரடி உத்தரவு!
பாஜக கொண்டுவந்த மதமாற்றம் தடை சட்டத்தை திரும்ப பெறுவதாக சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காங்கிரஸ்
கர்நாடகா சட்டசபை தேர்தலில் பெரும்பாலான வாக்குகளை பெற்று காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதில் சித்தராமையா முதல்வராக ஆட்சி அமைத்து வருகிறார்.
தேர்தல் நேரத்தில், காங்கிரெஸ் சார்பில் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், தற்பொழுது பெண்களுக்கு இலவச பேருந்து மற்றும் 200 யூநிட் இலவச மின்சாரம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
அதிரடி உத்தரவு
இதனை தொடர்ந்து, முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்ப பெறப்படும் என இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா முடிவு செய்துள்ளார்.
மேலும், கர்நாடகா பாடப் புத்தகங்களில் ஹெட்கேவர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்கள் பற்றிய பாடங்கள் நீக்கப்படுகின்றன. தொடர்ந்து, கர்நாடகாவில் அனைத்து அரசு, தனியார் பள்ளி- கல்லூரிகளில் தேசத்தின் அரசியல் சாசனம் கட்டாயம் இடம்பெறுவதற்கான நடவடிக்கையையும் எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.