49 பேர் ஆப்செண்ட்.. காங்கிரஸ் தலைவர் தேர்தல் - நாளை வாக்குப்பதிவு!

Indian National Congress Rahul Gandhi Tamil nadu
By Sumathi Oct 18, 2022 05:59 AM GMT
Report

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் தமிழகத்தில் 662 வாக்குகள் பதிவாகியுள்ளன.

காங்கிரஸ் தேர்தல்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன் கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அனைத்து மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகங்களிலும் வாக்களிக்கத் தகுதியான காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

49 பேர் ஆப்செண்ட்.. காங்கிரஸ் தலைவர் தேர்தல் - நாளை வாக்குப்பதிவு! | Congress Election Tamilnadu Register 662 Votes

இதற்காக டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 711 பேர் வாக்களிக்க தகுதியான நிலையில், 662 வாக்குகள் பதிவாகியுள்ளதாக கட்சியின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா தெரிவித்துள்ளார்.

வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிகளின் மேல்பகுதி சீல் இடப்பட்டு இன்று இரவு விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்படவுள்ளன.