காங்கிரஸ் அழிகிறது.. பாகிஸ்தான் அழுகிறது; இதுதான் காரணம் - பிரதமர் மோடி தாக்கு!

BJP Narendra Modi Gujarat India Lok Sabha Election 2024
By Jiyath May 02, 2024 08:38 AM GMT
Report

இந்தியாவில் இன்று காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி

குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் இன்று பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது "நான் குஜராத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த தேர்தலில் நாம் புதிய சாதனை படைப்போம்.

காங்கிரஸ் அழிகிறது.. பாகிஸ்தான் அழுகிறது; இதுதான் காரணம் - பிரதமர் மோடி தாக்கு! | Congress Dying Pakistan Crying Says Pm Modi

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற 24 மணிநேரமும் (24x7) உழைப்பேன் என்பது எனது உத்தரவாதம். இந்தியாவில் இன்று காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இங்கு காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது.

எழுதி கொடுங்கள்.. நான் உயிரோடு இருக்கும் வரை இது நடக்காது - சவால் விட்ட பிரதமர் மோடி!

எழுதி கொடுங்கள்.. நான் உயிரோடு இருக்கும் வரை இது நடக்காது - சவால் விட்ட பிரதமர் மோடி!

பாகிஸ்தான் துடிக்கிறது

அங்கே பாகிஸ்தான் அழுகிறது. தற்போது காங்கிரசுக்காக பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இளவரசரை (ராகுல் காந்தி) பிரதமராக்க பாகிஸ்தான் துடிக்கிறது. இந்தியாவில் பலவீனமான அரசு வருவதை பாகிஸ்தான் விரும்புகிறது.

காங்கிரஸ் அழிகிறது.. பாகிஸ்தான் அழுகிறது; இதுதான் காரணம் - பிரதமர் மோடி தாக்கு! | Congress Dying Pakistan Crying Says Pm Modi

பாகிஸ்தானை பின்பற்றும் ரசிகனாக காங்கிரஸ் இருப்பது நமக்கு முன்பே தெரியும். பாகிஸ்தானுக்கும், காங்கிரசுக்கும் இடையேயான இந்த கூட்டு தற்போது முற்றிலும் அம்பலமாகி உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.