திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சு வார்த்தை
தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி நேற்று திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் உம்மன் சாண்டியை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் உம்மன் சாண்டி கூறும்போது, “தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவோம்.
காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள பேச்சுவார்த்தை குழுவினர் டெல்லியில் இருந்து வந்துள்ளனர். அவர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பர் 7 முதல் அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
யாழ். பல்கலையில் நியமனத்தின் போது புறக்கணிக்கப்பட்ட அலுவலக உதவியாளர்கள்! முன்வைத்துள்ள குற்றச்சாட்டு IBC Tamil
அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டம்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு IBC Tamil