திருநங்கைக்கு முக்கிய பணி வழங்கிய அமெரிக்க அரசு குவியும் பாராட்டு!
அமெரிக்க அரசு திருநங்கை ஒருவருக்கு முக்கிய பதவி ஒன்றை வழங்கியது , தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது .கடந்த ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் சுகாதாரத்துறை துணை செயலாளராக ரேச்சல் லெவின் என்ற திருநங்கை பதவியேற்றுள்ளார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவருக்கு பெரிய பதவி வழங்கப்பட்டது தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
மூத்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான ரேச்சல், முன்னதாக பென்சில்வேனியா மாகாணத்தில் சுகாதாரத் துறை செயலாளராகப் பதவி வகித்து குறிப்பிடத்தக்கது. திருநங்கைகள் அரசியல், சினிமா, தொழில்துறை உள்ளிட்ட பல துறைகளில் சாதிக்கத் துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் அமெரிக்க அரசு திருநங்கை ஒருவருக்கு மிக முக்கிய பதவி வழங்கியது பல்வேறு நாடுகள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.