காங்கிரஸ் எப்போதுமே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது - அமித் ஷா கடும் தாக்கு!
காங்கிரஸ் எப்போதுமே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என அமித் ஷா விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எதிரானது
நடப்பாண்டின் இறுதியில் அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் கட்சி எப்போதுமே பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர்களுக்கு எதிரானது எனக் கூறினார்.
இது தொடர்பாக அமித் ஷா பேசியதாவது, 1950-ம் ஆண்டு ஓபிசி பிரிவனருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக காகா கலேகர் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் வழங்கிய பரிந்துரைகள் பல வருடங்களாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.
அமித் ஷா
1980-ல் இந்திரா காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டார். 1990-ல் மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டபோது ராஜிவ் காந்தி ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இரண்டரை மணி நேரம் பேசினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கான இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கியது. அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தால் கர்நாடகாவில் நடந்தது போன்று நடந்திருந்திருக்கும்.
அரியானாவில் முஸ்லிம் இடஒதுக்கீட்டிற்கு அனுமதிக்கமாட்டோம் என்பதை உறுதியாக உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பாஜக தனி மெஜாரிட்டியுடன் ஆட் அமைக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.