கோயில் திருவிழாவில் பயங்கர மோதல்; வெடித்த கலவரம் - பெண்கள், சிறுவர்கள் மீது தடியடி?
கோவில் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலை போலீசார் தடியடி நடத்தி கட்டுப்படுத்தினர்.
கோயில் திருவிழா
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படும். இந்த நிலையில், எப்போது ஒரு தரப்பு மட்டுமே நடத்தி வந்த இந்த திருவிழாவை வழக்கத்து மாறாக வேறொரு தரப்பு நடத்த கோரிக்கை வைத்துள்ளது.
இதனால் இல்லை தரப்பினருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு திருவிழா நிறுத்தப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும் அதில் உடன்பாடு இல்லாத இரு தரப்பு மீண்டும் இந்த மோதல் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
வெடித்த கலவரம்
அதுமட்டுமல்லாமல் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் ஒரு தரப்பு தீ வைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்தப் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். பின்னர் மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த கலவரம் பற்றிய தகவலறிந்த அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார். அதன் பிறகு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த கலவரத்தில் பெண்கள், சிறுவர்கள் மீது தடியடி நடத்தியதாக குற்றச்சாட்டு கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் போராட்டம் நடைபெற்று வருகிறது.