எனக்கு எய்ட்ஸ் இருக்கு; அவர் என் மகள் போன்றவள் - இளம்பெண் மரணத்தில் பகீர் வாக்குமூலம்!

Crime Mumbai
By Sumathi Jun 10, 2023 05:24 AM GMT
Report

இளம்பெண்ணை வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவத்தில் பல திருப்பங்கள் வெளிவந்துள்ளது.

லிவிங் டுகெதர்

மும்பையைச் சேர்ந்தவர் மனோஜ் ரமேஷ் சானே(56). இவர் தன்னுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்துவந்த சரஸ்வதி வைத்யா (32) என்ற பெண்ணை கொடூரமாக வெட்டி, வேகவைத்து, மிக்ஸியில் அரைத்து அப்புறப்படுத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எனக்கு எய்ட்ஸ் இருக்கு; அவர் என் மகள் போன்றவள் - இளம்பெண் மரணத்தில் பகீர் வாக்குமூலம்! | Confession Of Man Hacked Woman Lived With Mumbai

அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். அதில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நான் சரஸ்வதி வைத்யாவை கொலை செய்யவில்லை. கடந்த ஜூன் 3ஆம் தேதி நாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்து பார்த்த போது, அவர் தரையில் வாயில் நுரை தப்பியவாறு மயங்கி கிடந்தார்.

பகீர் வாக்குமூலம்

நான் சென்று அவரை சரிபார்த்த போது, ஏற்கனவே அவர் இறந்திருந்தது எனக்கு தெரிந்தது. இது வெளியில் தெரிந்தால் ஒருவேளை நான் கொலை குற்றத்தில் மாட்டிக்கொள்வேனோ என்று பயந்துதான், உடலை துண்டாக வெட்டி அப்புறப்படுத்த முயன்றேன். 2008ஆம் ஆண்டு தனக்கு ஹச்வி பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது.

இறந்த சரஸ்வதி வைத்யா தனக்கு மகள் போன்றவர் என்றும், எந்த உடல் ரீதியான உறவிலும் தாங்கள் இருக்கவில்லை. அவர் அப்பா அம்மா என யாரும் இல்லாத அனாதை. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற விரும்பியதால் அவருக்கு கணக்கு பாடம் கற்றுக்கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தின் போது அவர் முகத்தில் எந்த வித வருத்தமும் இருக்கவில்லை என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.