பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவி; ஹீரோ போல் காப்பாற்றிய நடத்துநர் - வைரல் Video!
காப்பாற்றிய கண்டக்டர்
தனியார் பேருந்து ஒன்று ஈரோட்டில் இருந்து மேட்டூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இறங்க வந்த மாணவி ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் பேருந்திலிருந்து தவறி விழப்போனார்.
அப்போது படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த நடத்துநர் துரிதமாக செயல்பட்டு அந்த மாணவியை பிடித்தார். பின்னர் அந்த மாணவியின் முடியை பிடித்து இழுத்து மேலே தூக்கினார்.
பாராட்டு
இதனால் அந்த மாணவி எந்த பாதிப்புகளும் இல்லாமல் காப்பாற்றப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
கடவுளைப்போல் மாணவியின் உயிரை காப்பாற்றிய நடத்துநரின் துரிதமான நடவடிக்கைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு to மேட்டூர் செல்லும் தனியார் பேருந்தில் நடத்துனரின் துரிதமான மற்றும் மிக கவனமான செயலால் ஒரு மாணவியின் உயிர் காப்பாற்றபட்டுள்ளது. முடியை பிடித்து இழுத்து காப்பாற்றியது வலிக்கிறதா? என தொட்டு பார்த்து கேட்கும் மனிதம் ♥ பேரன்புகள் நடத்துனரே! pic.twitter.com/MO1rusPXXB
— Tr Gayathri Srikanth (@Tr_Gayathri) February 1, 2024

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil
