பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்கள் - அரசு அதிரடி நடவடிக்கை!
இலங்கையில் பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
ஆணுறை விற்பனை
இலங்கையில், 2017ஆம் ஆண்டு முதல், ஆணுறை விற்பனை இயந்திரம் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் நிறுவப்பட்டது.
ஆனால், கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, மார்ச் முதல் நவம்பர் வரை ஆணுறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், கடந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் ஆணுறைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எச்.ஐ.வி பரவல்
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் ஜானகி வித்யாபத்திரன, பொது இடங்களில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்போது மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு இந்த ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.