இது என் வாழ்நாள் முழுக்கவே குறையாவே இருக்கும் - கண்கலங்கிய கார்த்தி!
விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
விஜயகாந்த் மறைவு
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். இது பெரும் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் கார்த்தி தனது தந்தை நடிகர் சிவகுமாருடன் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, “கேப்டன் நம்முடன் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
கார்த்தி அஞ்சலி
அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செய்ய முடியவில்லை என்பது என் வாழ்நாள் முழுக்க ஒரு பெரிய குறையாகவே இருக்கும். அவருடன் நெருங்கிப் பழக வாய்ப்பு கிடைத்ததில்லை. நான் சிறுவனாக தி.நகரில் இருந்தபோது, அவருடைய வீட்டில் தினமும் யாருக்காவது சாப்பாடு போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

அவருடைய படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நடிகர் சங்கத்தில் நாங்கள் ஜெயித்தபிறகு அவரை நேரில் சந்தித்தபோது மிகவும் மகிழ்ச்சியுடன் பேசினார். நடிகர் சங்கத்தில் பெரிய சவால்களை சந்திக்கும் போதெல்லாம் அவரை நினைத்துக் கொள்வோம். அவர் மிகப்பெரிய ஆளுமை.
நம்முடன் அவர் இல்லை என்பது பெரிய வருத்தம். எங்கள் மனதில் அவர் எப்போதும் இருப்பார். வரும் 19ஆம் தேதி அவருக்காக ஒரு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம். அவருடைய புகழ் எப்பவும் நிலைக்கும் வகையில் நாங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள், அரசிடம் வைக்க வேண்டிய கோரிக்கைகள் அனைத்தையும் அங்கு சொல்வோம்” என கண்கலங்கினார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil