தீவிர காதல்; இதை ஏத்துக்க முடியாது விஜி - விஜயகாந்த் குறித்து உருகிய நடிகை ராதிகா!

Raadhika Tamil Cinema Vijayakanth Death
By Sumathi Dec 29, 2023 05:30 PM GMT
Report

விஜயகாந்த் குறித்து நடிகை ராதிகா உருக்கமான இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

விஜயகாந்த் மறைவு

சினிமாவில் விஜயகாந்த் ஆழமாக காலூன்றிய காலத்தில் அவருக்கும் நடிகை ராதிகாவிற்கும் காதல் ஏற்பட்டதாக தகவல்கள் பல வெளிவந்தன. இருவரும் திரையில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், நிஜ வாழ்க்கையிலும் காதலிக்கத் தொடங்கினார்கள் எனவும்,

raadhika condolences-to-vijayakanth

திருமணம் வரை சென்ற நிலையில் திடீரென நின்றுபோனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகரும், தேமுதிக கட்சியின் நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தேமுதிக கட்சி அலுவலகத்தின் வளாகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவளோ தரக்குறைவா பேசுனாரு...அப்போகூட விஜயகாந்த் இத தான் சொன்னாரு..!!

அவளோ தரக்குறைவா பேசுனாரு...அப்போகூட விஜயகாந்த் இத தான் சொன்னாரு..!!

ராதிகா உருக்கம் 

தொடர்ந்து, ராதிகா தனது முகநூல் பக்கத்தில், "திரை உலகில் கடுமையான உழைப்பால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் விஜயகாந்த்! அதேபோல் அரசியலிலும் ஈடுபட்டு அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றவர்..!! விஜயகாந்த் வில்லனாக நடித்த காலத்திலிருந்தே நிறைய படங்களில் அவருடன் நான் நடித்திருக்கிறேன்..!!

தீவிர காதல்; இதை ஏத்துக்க முடியாது விஜி - விஜயகாந்த் குறித்து உருகிய நடிகை ராதிகா! | Actress Radhikaa Condolences To Vijayakanth

தன்மானத்தை தனது உயிரை விட பெரிதாக கருதியவர் அவர்.!! சினிமாவில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து அடித்தட்டு மக்களின் மனங்களை கவர்ந்தவர் ...!! அப்படிப்பட்ட விஜயகாந்த் சில வருடங்களாக உடல் நலம் குன்றி அடிக்கடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது எல்லோருக்குமே அது வேதனையாக இருந்தது..!! அவருடைய நண்பர்களும் ரசிகர்களும் மிகவும் துடித்து போனார்கள்..!!

விஜயகாந்த் இந்த உலகில் இனி இல்லை என்பதை யாருடைய மனமும் ஏற்றுக் கொள்ளாது...!! அந்த அளவுக்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்..!! இந்த நேரத்தில் தமிழ்நாடு அரசின் முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகளை நடத்த முன் வந்தது விஜயகாந்த் அவர்களுக்கு அளித்த உண்மையான கௌரவம் என்று நான் கருதுகிறேன்...!!

ஏழை எளிய மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்ற விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்...!! அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன்...!!you have done your best Viji" எனக் குறிப்பிட்டுள்ளார்.