ஜூஸில் விஷம்? கட்டாயப்படுத்தி குடுத்தாங்க, நெஞ்சு வலி வந்துடுச்சி - மன்சூர் அறிக்கை!

Mansoor Ali Khan Vellore
By Swetha Apr 18, 2024 05:08 AM GMT
Report

மருத்துவமனையில் உள்ள மன்சூர் அலிகான் தனது உடல் நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 மன்சூர் அறிக்கை

நடிகர் மன்சூர் அலி கான் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பல ரசிகர்களை ஈர்த்துளார்.அவர், தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியின் தலைவரான வரும் மக்களவை தேர்தலில் அவர் வேலூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

ஜூஸில் விஷம்? கட்டாயப்படுத்தி குடுத்தாங்க, நெஞ்சு வலி வந்துடுச்சி - மன்சூர் அறிக்கை! | Compulsively Drunk Juice Got Chest Pain Mansoor

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வழக்கம் போல பிரச்சாரத்தில் இருந்த அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

திடீரென உடல் நல குறைவு - மருத்துவமனையில் மன்சூர்

திடீரென உடல் நல குறைவு - மருத்துவமனையில் மன்சூர்

நெஞ்சு வலி வந்துடுச்சி

இந்நிலையில், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு மோர் குடுத்தாங்க.குடித்த உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன் மயக்கம், அடி நெஞ்சில் தாங்க முடியாத வலி ஏற்பட்டது.

ஜூஸில் விஷம்? கட்டாயப்படுத்தி குடுத்தாங்க, நெஞ்சு வலி வந்துடுச்சி - மன்சூர் அறிக்கை! | Compulsively Drunk Juice Got Chest Pain Mansoor

இதனைத் தொடர்ந்து பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை கொடுத்தும் வலி நிக்கல. வலி அதிகமாகவும் சென்னையில் உள்ள K.M. நர்ஸிங் ஹோம்க்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்தாங்க. டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூ.ல அட்மிட் பண்ணி, இப்ப வலி கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக சிகிச்சை கொடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுகிறது” இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.